stone

சிறுநீரக கல்லடைப்பு இவை 14 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் வரலாம்.

பொதுவாக உருவாகும் கல்லானது சிறுநீரகம் (Kidney) சிறுநீரக பாதை (Ureter) சிறுநீரக பை (Bladder) குறி (Urethra) ஆகிய இடங்களில் அடைப்பினை ஏற்படுத்தலாம்.


கற்கள் உருவாகக் காரணம்:
  • குறைந்த அளவு நீர் பருகுதல் இவற்றால் சிறுநீர் செறிவு (Concentration of urine) உண்டாகலாம்.
  • உப்பு மற்றும் கனிமங்கள் படிவதின் காரணத்தினால் நாள்பட்ட நிலையில் கல் உருவாகக் கூடும். இவை படிகம் (crystal) போல காணப்படும்.
  • இது மட்டும் இன்றி தக்காளி, முட்டைகோஸ், சோயா மற்றும் சுண்ணாம்பு சத்துள்ள மாத்திரைகளை அதிக அளவு தேவையின்றி உட்கொள்ளும்போது சிறுநீரக கல் உருவாக காரணமாய் இருக்கின்றது.

1. முதுகின் பின் பக்கத்தில் இருந்து முன் பக்கமாக வலி பரவுதல்.
2. சிறுநீரகத்தில் (Kidney) கல் இருக்கும்போது சிறிது அளவே வலி காணப்படும் இருப்பினும் கல்லானது சிறுநீரக பை (Urinary Bladder) இவற்றில் இருப்பின் வலி அதிகரித்து காணப்படும்.
3. கல்லானது ஒரு இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகரும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.
4. பின் அந்த கல்லானது ஒரே இடத்தில் இருக்கும்போது வலியானது குறைந்து காணப்படும்.
5. தலை சுற்றல், வாந்தி உணவில் விருப்பிமின்மை ஆகியன காணப்படும்.

  1. எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல்
  2. அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுதல்
  3. அடிக்கடி சொட்டு சொட்டாக நீர் வெளியேறுதல்
  4. செந்நிறம் மற்றும் அரக்கு நிறமாக நீர் காணப்படுதல்
  5. சில வேளை சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல் ஆகியவை காணப்படும்.

சிறுநீரக கற்களுக்கு எங்களது மருத்துவத்தில் எவ்வித பக்க விளைவுகளின்றி முறைப்படி முதலில் கற்களை உடைக்க கூடிய மருந்துகளையும், பின் கற்களை கரைக்க கூடிய மருந்துக்களையும் பின் சிறுநீரைப் பெருக்கக் கூடிய மருந்துகளையும் தக்க முறைப்படி தக்க அனுபானத்தில் நோயாளியின் உடல் வன்மைக்கு ஏற்ப வழங்கி வருகின்றோம்.

அதிக பட்சம் 25-30 நாட்களில் சிறுநீருடன் கற்கள் வெளியேறுவதை நீங்களே காணலாம்.

எங்கள் மருந்துகள் யாவும் தனித்தன்மை உடையவை, வேறு எங்கும் கிடைக்காது, பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏடுகளையும், நூல்களையும் ஆராய்ச்சி செய்து அவற்றில் இருக்கும் நுணுக்கங்கள் மற்றும் அதில் இருக்கும் மெய்ஞானம், இவற்றை அறிந்து தெரிந்து, புரிந்துகொண்டு செய்யப்பட்டவை ஆகும்.   

share

வாழ்க வளமுடன்