failure

சிறுநீரக செயலிழப்பு வர காரணம் என்னவென்றால் நாள்பட்ட நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் உட்கொள்ளுதல், தினமும் ஊறுகாய் உட்கொள்ளுதல், அதிக அளவில் மது அருந்துதல், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துதல், சிறுநீரகத்திற்கு செல்லும் குருதி குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படுதலே ஆகும். இவற்றால் உலகில் 8 முதல் 10 சதவீதமான மக்கள் சிறுநீரக நோயால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

சிறுநீரக கல், சிறுநீரக குழாய் தொற்று (urinary Track infection) உயர் இரத்த அழுத்தம் (hypertensive nephrosclerosis) இதனை தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு வரலாம்.

சிறுநீரகத்தின் பணிகள் என்னவென்றால் தினமும் உடலில் உண்டாகும் நச்சு பொருட்களை வடிகட்டி சிறுநீரில் கழிவுகளை அனுப்பும் முக்கிய பணியை செய்து வருகின்றது. தேவைக்கு அதிகமான உப்புக்களையும் தாதுக்களையும் பிரிக்கின்றது. இரத்தத்தின் கார அமில தன்னையை நிர்வகிக்கின்றது.


சிறுநீரக செயலிழப்பின் குறிகுணங்கள் :
 • மிக குறைந்த அளவின் சிறுநீர் வெளியேறுதல்
 • நுரைபோன்ற சிறுநீர் வெளியேறுதல்
 • சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்
 • சிறுநீரை வெளிபடுத்துவதில் சிரமம்.
 • கை, கால், முகம், வீங்குதல்
 • உடல் தொடர்ந்து சோர்வடைதல்
 • தோலில் சொறி மற்றும் அரிப்பு ஏற்படுதல்.
 • உணவின் சுவை அறிய இயலாமை
 • வாந்தி, குமட்டல், தலைவலி, தலைசுற்றல்,
 • மூச்சுத் திணறல்
 • கால் மற்றும் பக்கவாட்டு வலி ஆகியன காணப்படும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்படைந்துள்ள நோயாளிகளுக்கு கூழ்மப்பிரிப்பு (Dialysis) நிரந்தர தீர்வு அல்ல.

சிறுநீரக செயலிழப்பின் குறிகுணங்கள் :
 1. இரத்த அழுத்தம் குறைதல் (Low blood pressure)
 2. வாந்தி, பதட்டம் மற்றும் மயக்கம்
 3. நாள்பட்ட நிலையில் (Dialysis) செய்த இடங்களில் சீழ்பிடித்தல் இவற்றின் மூலம் கிருமிகள் உடல் முழுமையும் பரவலாம், பின் சுரம் ஏற்படலாம்.
 4. தசை பிடிப்பு ஏற்படலாம்
 5. உடல் முழுமையும் அரிப்பு, தினவு ஏற்படலாம்
 6. தூக்கமின்மை கை,கால் வலி, அதிகரித்து காணப்படலாம்.
 7. இரத்த அழுத்தம் அதிகரித்தல் (Increased Blood Pressure)
 8. வயிறு ஊதிக்காணுதல், குடலிறக்கம், உடல் எடை கூடுதல் ஆகிய பக்க விளைவுகள் காணப்படலாம்.

எனவே Dialysis, சிறுநீரக செயலிழப்பிற்க்கு நிரந்தர தீர்வு அல்ல, நாள்பட்ட நிலையில் செந்நிற இரத்த அணு (hemoglobin) குறைந்து கொண்டே வரும்.

எங்களது மருந்துவத்தின் முதல் படியே சாரம் மற்றும் இரத்தத்;தை (செந்நீரை) பலப்படுத்தி மற்றும் படிபடியாக சிறுநீரகத்தை செயல்படுத்தும் வகையில் மருந்துகளை வழங்குகின்றோம். இவற்றால் துளிகூட பக்க விளைவு கிடையாது.

எங்களிடம் மருந்து சாப்பிட்டு வரும்போது யூரியா மற்றும் கிரியேட்டினைன் படிப்படியாக குறைந்து அதன் சரியான அளவிற்கு (normal value)-விற்கு வருவதை நீங்களே காணலாம். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.


சிறுநீரக நோயாளிக்கு உணவு திட்டம்:

1. வழக்கமான உணவு முறையிலிருந்து உப்பு, பொட்டாசியம், பாஸ்பேட் இவைகள் குறைக்கப்பட்ட உணவுகளே சிறுநீரக செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்கு சிறந்ததாகும்.
2.நோயின் தன்மைக்கேற்ப உப்பு, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
3. மருந்து உட்கொள்ளும்போது எடுத்துக்கொள்ளக்கூடிய தண்ணீர் அளவு, டீ, காபி, பால், தயிர், மோர், ரசம், ஜுஸ் இது போன்ற எந்த திரவ உணவானாலும் இதனை திரவ உணவு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 1. மஞ்சள்தூள், தனியா
 2. தேங்காய்
 3. இளநீர், குளிர்பானம்,பழம் (ஆரஞ்சு, சாத்துக்குடி) மற்றும் பழச்சாறுகள்
 4. கோக்கோ, காபி, டீ, வெல்லம், சாக்லேட், பூஸ்ட் ஹார்லிக்ஸ்
 5. உலர்ந்த பழங்கள் (பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை)
 6. அகத்திக்கீரை, பருப்பு கீரை, முருங்கைக்கீரை
 7. பருப்பு வகைகள்
 8. பாதுகாக்கப்பட்ட உணவு வகைகள் (Tinned Food items).
 9. சோடா உப்பு, அஜீனோமோட்டோ, உப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களான கருவாடு, உப்புக்கண்டம், சிப்ஸ், ஊறுகாய், பாப்கார்ன், பேக்கிங் பவுடர், பொரி வகைகள், கார்ன்பிளாக்ஸ்
 10. கேக், பாலாடைக்கட்டி, சூப் வகைகள்
 11. சாஸ் வகைகள், தக்காளி, சோயா

கிழங்கு வகைகளையும், காய்கறிகளையும், தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி அதிக நீரில் வேகவைத்து நீரை வடிகட்டி பின்பு சமைக்கவும். கீரைகளையும் இதேபோல் சிறிதாக நறுக்கி வேகவைத்து நீரை வடித்து பின்பு நமது விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து கொள்ளலாம். அதிகம் மசாலா, எண்ணெய் சேர்க்க வேண்டாம்.

முட்டைகோஸ், பீன்ஸ், பாகற்காய், அவரைக்காய், காலிபிளவர், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைக்காய், வெள்ளரிக்காய்,தக்காளி.
கீரைகள் வாரத்திற்கு - இருமுறை மட்டும்
முட்டை வெள்ளைக்கரு - தினமும்
மீன் வாரம் ஒரு முறை - 25 கிராம்- குழம்பில் போட்டது

1. ஆடை (கொழுப்பு) நீக்கப்பட்ட பால் 2. சமையல் எண்ணெய் (Refined Cooking oil) - (உதாரணம் : சூரியகாந்தி எண்ணெய்) 3. உணவில் சிறிது சாதாரண உப்பிற்கு பதிலாக இந்துப்பை பயன்படுத்தலாம்.


பழவகைகள் சாப்பிடக்கூடியது :
ஆப்பிள்
அன்னாசி
பப்பாளி
கொய்யா

share

வாழ்க வளமுடன்