டாக்டர். அழகப்பன் பற்றி

 டாக்டர் அ.அழகப்பன் BSMS, MD., இவர் காரைக்குடியில் பல ஆண்டுகளாக மக்கள் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சித்த மருத்துவத்தை மிக குறைந்த செலவில் வழங்கி வருகிறார்.

“நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் 
 வாய்நாடி வாய்ப்பச் செயல்”

இந்த திருக்குறளுக்கு ஏற்ப நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தை அறிந்து, நோய் நீக்கும் வழிகண்டு உடலுக்குப் பொருந்தும்படியான மருந்துகளை வழங்கி பல சிறுநீரக பாதிப்புடைய நோயாளிகளை குணமடையச் செய்திருக்கிறோம்.

மற்றும் எங்கள் மருந்துகள் யாவும் தனிதன்மையுடையது, வேறு எங்கும் கிடைக்காது மற்றும் எங்கள் சிகிச்சையில் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை, பாதிப்படைந்த நோயாளி குணமடையும் காலம் ஒருவருக்கொருவர் மாறுபடலாம் அவை நோயின் பாதிப்பு நிலை, நோயாளியின் வன்மை இவற்றை கொண்டு மாறும்.

பஞ்ச பூதங்களும் ஒருங்கே சேர்ந்து அமைக்கப்பட்ட மறைவு மருந்தாகிய பிரணவம் என்ற அமிர்தமே (அண்டம்) இதை உணர்ந்து அறிந்தாலன்றி மருத்துவ முறைகள் எதிர்பார்க்கும் பெரும் பலனைத் தராது. இம்மறைவு மருந்தின் இரகசியத்தை சித்தர்கள் தெளிவுபடுத்தி பல பாடல்களிலும், குறிப்புகளிலும் உணர்த்தியுள்ளனர். இவ்வண்டப்பொருளை பலநாட்டு அறிஞர்களும் அறிந்து பல பெயர்களைக் கொண்டு வழங்கிவந்தனர்

இந்த அமிர்த உப்பை (அண்டம்) உண்ட தேகிகள் உடல் சுண்ணமாகி விடும் இந்த நிலையில் பஞ்ச பூதங்களாலும் நவக்கிரகங்களாலும் மாற்றவும், பாதிக்கவும் முடியாத ஒன்றாகி விடுகின்றது. இந்த நிலையை அடைந்த யோகி எத்தனை யுகமும் உலகில் அழியாமல் நரை திரை மூப்பு இன்றி சிரஞ்சீவியாக இருக்கலாம்.

இந்த ஆராய்ச்சியில் செய்யப்பட்ட மருந்துகள் அதிக வீரியமும், இவை ஆயுள் பாகத்தை பெருக்கக்கூடிய தன்மையும், தீர்க்க முடியாத வியாதிகளைக்கூட அமிர்தத்தால் முடிந்த சூரணமே தீர்க்கவல்லது. கன்ம நோய்களையும் தீர்க்கவல்லது இத்தகைய மருந்துகள். இதை தாயுமானவரும் “அன்பால் விளைந்த ஆரமுதே” என்கிறார். இவர் மண்ணையும் அமிர்தத்தையும் நன்றாக தெளிவு படச் சொல்லி உள்ளார்.